இயேசு கிறிஸ்துவே தேவன்
JESUS CHRIST IS GOD
 
இயேசுகிறிஸ்துவே தேவன் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் வெளிப்பாடு. பழைய ஏற்பாட்டின் யெகோவா புதிய ஏற்பாட்டின் இயேசுவாக இருக்கிறார். எவ்வாறு முயன்றாலும், மூன்று கடவுள்களுண்டு என்பதை நிரூபிக்க இயலாது. தேவன் ஒருவரே என்னும் சத்தியத்தைப் பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலினால் மாத்திரம் அறிய முடியும். அல்லாமலும், பழைய ஏற்பாட்டின் யெகோவாதான் புதிய ஏற்பாட்டின் இயேசு என்பதையும் வெளிப்படுத்துதலின் மூலமே அறிந்துகொள்ள முடியும். சாத்தான் சபைகளில் நுழைந்து, இச்சத்தியத்தை அறியாதவண்ணம் மக்களின் கண்களைக் குருடாக்கிப் போட்டான். அவ்வாறு செய்த மாத்திரத்தில் ரோமன் கத்தோலிக்க சபையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதை நிறுத்திவிட்டது.
பரிசுத்த வேத வாக்கியங்களின் அர்த்தம் மாற்றப்படும் இந்நாட்களில் வாழும் நமக்கு தேவத்துவத்தைக் குறித்த சத்தியம் பரிசுத்த ஆவியானவரின் மூலமே வெளிப்படும். ஜெயங்கொள்ளும் சபை வெளிப்படுத்துதலின்மேல் கட்டப்பட்டிருப்பதால், எல்லா சத்தியத்தையும் தேவன் நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் நமக்கு அவசியமேயில்லை. ஏனெனில் வேதவசனம் இதைப் பற்றித் திட்ட வட்டமாகக் கூறுகிறது. தேவனுடைய நேர்முகமான கட்டளையாகிய பிதா குமாரன். பரிசுத்த ஆவியின் நாமத்திலுள்ள ஞானஸ்நானத்தை அப்போஸ்தலர்கள் தள்ளிப்போட்டு, அது உண்மையென்று அறிந்தும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்திருக்க ஏதுவுண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லவே அல்ல. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து' என்று அவர்கள் அறிந்திருந்த படியால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தவிர வேறொரு நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் சான்று இல்லை. அப்போஸ்தலருடைய நடபடிகள்' உண்மையான சபையின் செயல்களைக் கொண்ட ஒரு புத்தகம் என்று பகுத்தறிவு நமக்குப் போதிக்கும். அப்படியிருக்க, அவர்கள் அவ்விதத்தில் ஞானஸ்நானம் கொடுத்திருக்கும் போது நாமும் அவ்விதமே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். அது ஒரு கடினமானது என்று நீங்கள் நினைத்தால் இதைக் குறித்து உங்கள் நிலை என்ன? அப்போஸ்தலர் காலத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாத எவனும் அந்நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருந்தது. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் : பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன் : அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள் : யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப் பின்வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவாகள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். '' (அப். 19:1-6).
எபேசுவில் வாழ்ந்த இந்த நல்ல மனிதர்கள், மேசியாவின் வருகையைக் குறித்து யோவான் பிரசங்கித்ததைக் கேட்டு, பாவத்தினின்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பெற்று இயேசுவை விசுவாசிப்பதற்கென அவருடைய வருகையை எதிர் நோக்கியிருந்தனர். ஆனால் அவர் வந்தபோது, அவரைக் காணத்தவறிவிட்டனர். இப்பொழுது அவர்கள் இயேசுவைப் பின்நோக்கி, பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெறும் சமயம் வந்துவிட்டது. அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுப் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தவுடனே, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்.
எபேசுவிலிருந்த இந்த மனிதர் மிகவும் அருமையானவர்கள்; அவர்கள் பாதுகாப்பிற்குள் இருந்தனர் என்ற சரியான உணர்வுள்ளவராய் இருந்தனர். வருகின்றவரான மேசியாவை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு விசுவாசமுள்ளவராயிருந்தனர். அவர்கள் அவருக்காக ஆயத்தமாயிருந்த போதிலும், அவரைக் காண தவறிவிட்டனர். ஏனெனில் அவர் வந்து, சென்று விட்டார். ஆகவே அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டியது அவர்களுக்கு அவசியமாயிருந்தது.
நீங்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவீர்களானால், பரிசுத்த ஆவியால் தேவன் உங்களை நிரப்புவார் என்று வேதவசனம் கூறுகிறது. எபேசியர் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் மூலம், 'நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்' (அப். 2:38) என்னும் வேத வாக்கியம் நிறைவேறிற்று. பவுலும், பேதுருவும் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் ஒரே ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசுகின்றனர். இதைக் கடைசி வரை மாற்ற முடியாது. பெந்தேகோஸ்தே நாள் தொடங்கி, தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி நபர் ஞானஸ்நானம் பெறும் காலம் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' (கலா. 1:8).
ஒருத்துவத்தில் (oneness) நம்பிக்கையுள்ள உங்களில் சிலர் தவறான முறையில் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். தண்ணீர் முழுக்கினால் இரட்சிப்புண்டு என்றெண்ணி மறுபிறப்பிற்கேற்ப (regeneration) ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். மறுபிறப்பு பரிசுத்த ஆவியின் கிரியையேயன்றி, அது தண்ணீர் முழுக்கினால் ஏற்படுவதல்ல. "நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டவன், தண்ணீர் முழுக்கு மனிதனைப் புதுப்பிக்கிறது என்று கூறவில்லை. அது "தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின்'' அடையாளமாயிருக்கிறது என்று கூறுகிறான்: ''அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது. மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்து வினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது' (1 பேதுரு 3:21) இதை நான் முற்றிலும் நம்புகிறேன்.
சரித்திரமானது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் அல்லது வேறு முறையான ஞானஸ்நானத்தை நசுப்படுத்துகிறது என்று உங்களில் யாராவது தவறான எண்ணங்கொண்டிருந்தால், நீங்களே சரித்திரங்களைப் படித்து அக்காலங்களில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தைக் குறித்து அறிய விரும்புகிறேன் கி.பி. 100-ம் ஆண்டில் ரோமாபுரியில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் 'டைம்' (Time) என்னும் பத்திரிகையின் டிசம்பர் 5, 1955-ம் வெளி யீட்டில் குறிக்கப்பட்டிருந்தது. அதில் மார்கஸ் வாஸ்கா (Marcus Vasca) என்பவர் பூப்ளியஸ் டெஸியஸ் (Publius Decius) என்பவருக்குக் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது பூப்ளியஸ், ''என்னுடைய இரட்சிப்பு பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையிலறையுண்ட இயேசுகிறிஸ்து வினிடத்திலிருந்து வருகிறது என்று நான் பூரணமாய் விசுவாசிக்கிறேன், அவரோடு நித்தியஜீவன் பெறுவதற்கென, நான் அவரோடுகூட மரித்தேன்" என்றுகூற, மார்கஸ்: ''நான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கிறேன்'' என்று கூறி பூப்ளியஸைத் தண்ணீரில் முழுக்கினதாகச் சரித்திரம் கூறுகிறது.
சத்தியத்தைச் சபையானது நிசாயாவில் இழக்கும்வரை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது இழந்த சத்தியத்தைச் சபையானது இந்நூற்றாண்டு தொடக்கத்தில், பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலினால் மீண்டும் பெற்றது. பரிசுத்த ஆவி வெளிப்படுத்தச் சித்தங்கொண்ட எதையும் சாத்தான் ஒருக்காலும் மறைக்க முடியாது.
மூன்று கடவுள்கள் இருப்பார்களாயின், பிதாவுக்கென்றும், குமாரனுக்கென்றும், பரிசுத்த ஆவிக்கென்றும் ஞானஸ்நானங் கொடுக்கலாம். ஆனால், ஒரே தேவன் உண்டு என்றும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே அவருடைய நாமமென்றும் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டபடியால், ஒரே தேவனுடைய நாமத்திலே நாம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் பேதுரு பெந்தேகோஸ்தே நாளில் இவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தான். 'நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக்கடவர்கள் (அப் 2:36) என்ற வெளிப்படுத்தலுக்கு அவன் கீழ்ப்படிய வேண்டியதாயிருந்தது. அப்படியெனில் தேவன் "கர்த்தராகிய இயேசு கிறிஸ்து' என்னும் நாமம் கொண்டவர்.
இயேசுவே ஆண்டவரும் கிறிஸ்துவுமானால், அவரே மாம்சத்தில் வெளிப்பட்ட ஒரே தேவனான பிதா, குமாரன், பரிசுத்த ஆவி' இது, திரித்துவக் கொள்கையின்படி ஒரே தேவனில் மூன்று ஆட்களுண்டு என்ற அர்த்தங்கொண்டதல்ல. ஒரே தேவன், ஒரே ஆள், மூன்று முக்கியமான உத்தியோகங்களை வகித்து அதற்குரிய மூன்று பட்டப் பெயர்களைப் பெற்றிருக்கிறார் என்பதுதான் அதன் அர்த்தம். இந்த இயேசுவே ஆண்டவரும் (பிதாவும்) கிறிஸ்துவுமாயிருக்கிறார் (பரிசுத்த ஆவி).
தேவத்துவத்தைக் குறித்த உண்மையான வெளிப்பாட்டை இது நமக்கு காண்பிக்காவிடில் அதை நமக்கு காண்பிக்க வேறொன்றுமே யில்லை. பிதா என்பவர் வேறொரு நபர் அல்ல. கிறிஸ்துவும் வேறொருவர் அல்ல. இயேசுவே ஒரே தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
பிலிப்பு ஒருநாள் இயேசுவினிடத்தில் வந்து 'பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்' என்றான். அதற்கு இயேசு பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண் டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நானும் பிதாவும் ஒன்றயிருக்கிறோம்'' என்றார் (யோவான் 14:8-9). இதை ஒருமுறை நான் செய்தியில் கூறினபோது, ஒரு ஸ்திரி எழுந்து சகோதரன் பிரன்ஹாமே. நீங்களும் மனைவியும் ஒன்றாயிருப்பது போலப் பிதாவும் இயேசுவும் ஒன்றாயிருக்கிறார்கள்'' என்றாள். அதற்கு நான் அவ்வாறில்லை. என்னைக் காணும்போது என்னுடைய மனைவியை நீங்கள் காணமுடியாது. ஆனால் ஒருத்துவம் (oneness) வித்தியாசப்பட்டது. ஏனெனில் இயேசுவைக் காணும்போதே பிதாவைக் காண்பதாக அவர் கூறுகிறார்'' என்று பதிலுரைத்தேன்.
சாயங்கால நேரத்தில் வெளிச்சமுண்டாகும் என்று தீர்க்கதரிசி கூறவிருக்கிறார் (சகரியா 14:7).
இந்தப் பாடல் இவ்விதம் கூறுகின்றது:
சாயங்கால நேரத்தில் வெளிச்சமுண்டாகும் மகிமையின் வழியை நீ நிச்சயம் கண்டடைவாய் இயேசுவின் விலையேறப் பெற்ற நாமத்தில் அடக்கம்
செய்யப்படுகின்ற தண்ணீர் வழிதான் இந்நாளின் வெளிச்சம்.
இளைஞரே முதியோரே உங்கள் எல்லா பாவத்திற்காக
மனந்திரும்புங்கள் பரிசுத்தாவி உங்களுக்குள் நிச்சயம் வருவார் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது - அது தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே என்கின்ற உண்மையே
சிறிது நாட்களுக்கு முன்பு, ஒரு யூத ரபியோடு நான் சம்பாஷித் துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் என்னை நோக்கி புற ஜாதி களாகிய நீங்கள் கர்த்தரை மூன்கைத் துண்டித்து - இவ்விதமான கர்த்தரை ஏற்றுக்கொள் என்று ஒரு யூதனோடு கூறினால்; அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். எங்களுக்குக் கர்த்தத்துவத்தைப் பற்றி உங்களைக் காட்டிலும் அதிகம் தெரியும்' என்றார். அதற்கு நான் புறஜாதியார் அவ்வாறு செய்வதில்லையென்று கூறி தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம்" என்று உரைக்க, நான் மறுபடியும்
ஏசாயா 9:6ஐ விசுவாசிக்கிறீர்களா'' என்று வினவினேன். அதற்கு அவர் அது மேசியாவைக் குறிக்கிறது என்று விசுவாசிப்பதாகவும், வரப்போகும் மேசியா தேவனாகத்தான் இருக்கமுடியும் என்பதாகவும்
தேவனை மூன்று நபர்களாகவோ பாகங்களாகவோ, செய்ய முடியாது
ஆம். ஒரு யூதனிடம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூவர் இருக்கின்றனர் என்று கூறுவோமானால், அத்தகைய கொள்கை நிசாயாவின் ஆலோசனை மகாநாட்டில் தோன்றினது என்பதை அவன் அறிந்திருக்கிறபடியால் நம்மை அஞ்ஞானியென்று இகழுவான்.
தேவன் மாறாதவராயிருக்கியர் என்று நாம் எண்ணுகிறபடியே, ஒரு யூதனும் விசுவாசிக்கிறான். ஆனால் சபையோ மாறக்கூடாத தேவனை ஒன்றிலிருந்து மூன்றாக மாற்றிப் போட்டது. தேவத்துவத்தைக் குறித்த அவ்வெளிச்சம் இந்த சாயங்கால நேரத்தில் உண்டாகிறது. யூதர்கள் பாலஸ்தீனாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் காலத்தில் இந்த சத்தியம் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே. இயேசுவே ஆண்டவரும் கிறிஸ்துவுமாயிருக்கிறார்.
யோவான் வெளிப்பாட்டைப் பெற்றிருந்தான். இயேசுவே அந்த வெளிப்பாடாய் இருந்தார்
இயேசுவும் தம்மை ஆமென், இருக்கிறவரும், இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் இதைக் குறித்த வெளிப்படுத்துதல் உனக்கு இல்லையெனில், அதற்காகக் கர்த்தரைத் தேடுவாயாக. வெளிப்படுத்துதல் கர்த்தரிடத்திலிருந்து வரவேண்டுமேயன்றி மனித ஞானத்தின் மூலம் கிடைக்காது. அநேக வேத வாக்கியங்களை மனப்பாடம் செய்தாலும் அது கிட்டாது. "பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவரும் சொல்லக் கூடாது." (1 கொரி. 12:3) என்று வேதம் எடுத்துரைக்கிறது. நீங்கள் முதலில் பரிசுத்த ஆவியைப் பெறவேண்டும். அதன்பின்னர்தான் இயேசுவே கிறிஸ்து தேவன், அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்னும் வெளிப்பாடு உங்களுக்குக் கிடைக்கும்.